18 சித்தர்களின் வரலாறு
மாபெரும் 18 சித்தர்களை வணங்கி அவர்களை போற்றி சிவத்தை அடைவோம். சிவனுக்கு சித்தன் என்ற பெயரும் உண்டு. சித்தமெல்லாம் சிவமயமே, சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற எளிய சொற்கள் சொல் வழக்கில் உள்ளவை. பெருங்கடவுள் ஆக்கல் படைத்த அருங்கடவுள் சிவபெருமானை மாபெரும் 18 சித்தர்கள் மூலம் அவரை அறிய முயல்வோம், அடைய முயல்வோம். குருவருளின்றி திருவருளை அடைய முயல்வது கடினம்.

சித்து என்னும் சொல் சித்தத்திலிருந்து தூண்டியதாக இருக்கலாம். சித்தம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய நான்கும் அந்தக்கரணம் எனப்படும். இவற்றில் மனம் ஒன்றி நினைக்கும். புத்தி நிச்சயிக்கும், அகங்காரம் முனைப்பைத் தோற்றுவிக்கும், சித்தம் இம்மூன்றிற்கும் காரணமாகும். மாபெரும் 18 சித்தர்களுக்கு பின்
ஆயிரக்கணக்கான (சித்தர்கள்) சித்தபுருஷர்கள் தோன்றியிருக்கலாம். அவை அனைத்தும் நாம் காண முடியாது சொல்லி அடங்காதவை. சித்தபுருஷர் கலை அருளையும், ஆசீர்வாதத்தையும் பெற்றவர்களே மிகப்பெரிய அருளாளர்களாகவும், ஆன்மீகச் செம்மல்களாகவும் தோன்றியிருக்கலாம். நாம் வாழும் காலத்தில் தோன்றிய வள்ளலார் பெருந்தகை காஞ்சி மாமுனிவர் சங்கராச்சாரியார் ஸ்வாமிகள், ஷீரடி மஹான் ஸ்ரீ சாயிபாபாஜி, பொள்ளாச்சி மகா குரு அழுக்குச்சாமியார் ஸ்வாமிகள், இவர்களைப் பின்பற்றி வந்த ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் இன்னும் இதுபோன்ற எண்ணற்றவர்கள் உள்ளனர். அவர்களையெல்லாம் பட்டியலிட்டு போற்றுவதற்கு ஒரு புத்தகம் போதாது இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் கூட 18 பக்கங்கள் போதாது.
இன்றைய தலைமுறையினருக்கு ஊடகத்தின் மூலமாகவும் மாதாந்திர, வாராந்திர புத்தகங்கள் மூலமாகவும், செய்தித் தாள்களின் மூலமாகம் ஆன்மீகத்தை அடையும் வழிவகைப் பாடலாகவும், கட்டுரைகளாகவும் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் கடவுளை பற்றிய புராணப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நாம் அதிகம் சொல்லவேண்டியதில்லை. 18 சித்தர்களையும் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இருந்தாலும், நமது மாபெரும் குலத்தெய்வத்தாய் அருளாட்சி செய்து நம்மையெல்லாம் நல்வழியில், நல்லமுறையில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் (அன்னை மத்துருகோட்டி அம்மன்) நமது அன்னை மக்கட்டையார் குலம்காக்க வந்துதித்த மத்துருகோட்டி அம்மனின் திருக்குடை நன்னீராட்டுப் பெருவிழாவின் இத்திருநாளில் நாம் 18 சித்தர்களையும் வணகுவதற்காகவும், அவர்கள் அதன் மூலம் நாம் நமது வாலகுருசாமி மத்துருகோட்டி அம்மன் அருளையும், ஆசியையும் பெற அவர்களை என்றென்றும் நினைவில் கொள்வதற்காகவும் கீழ்கண்ட 18 மாபெரும் சித்தர்களின் திருநாமங்களையும் அவர்களை துதி செய்ய உள்ள பாடல்களையும் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். இதன்மூலம் நாம் மாபெரும் தெய்வ நிலையை உணர்ந்து அறியவும், அம்மனின் அருளை பெறவும் வாழ்வாங்கு வாழ ஆசைப்படுகிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் என வாழ்த்துகிறேன்.
“சித்தபுருஷர் கலை அருளையும், ஆசீர்வாதத்தையும் பெற்றவர்களே மிகப்பெரிய அருளாளர்களாகவும், ஆன்மீகச் செம்மல்களாகவும் திகழ்வர்”
1.திருமூலர் - திருமந்திரம்

“பதமுத்தி மூன்றும் பலதென்று கைவிட்
டிதமுர்ற பாச இருளாய்த் துறந்து
மதமற்றனாதியான் மாற்றிவிட்டாங்கே
திருமுற்றவர்கள் சிவசித்தர்தாமே.”
2.போகர் - தியானச்செய்யுள்

“சிவிகை ஏந்தி, சிரம்தாழ்த்தும்
சித்தர் பெரு மக்களுக்கு
மூலிகை மனியாய் பேரருள்புரியும்
போகர் பெருமானே
சிவபாலனுக்கு ஜீவன்தந்த
சித்த ஒளியே
நவபாஷானத்து நாயகனே
உங்கள் நல்லருள் காக்க காக்க…”
3.கருவூரார் - தியானச்செய்யுள்

“கருவூரில் அவதரித்த மஹாஸ் தபஸ்யே திருக்
கலைத்தேரில் முடித்தறித்த தவே நிதியே
வாரி வழங்கி அருள் கொடுத்தாய்
மாறாத சித்ததுடையாய்
கள் உள்ளளவும் மண் உள்ளளவும் – உன்
கருணைக் கரங்களே காப்பு காப்பு.”
4.புலிப்பாணி சித்தர் - தியானச்செய்யுள்

“மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன
மரவுரி சித்தரே
புலி வாகனம் கொண்ட
மந்திர சித்தரே
மயில்வாகனனை வணங்கியரே
எம் கலிப்பாவம் தீர்க்க
உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.”
5. கொங்கணர் சித்தர் - தியானச்செய்யுள்

“கொக்கை எரித்த கொங்கணரே
அம்பிகை உபாசகரே
ஸ்ரீஉ கௌதமரின் தரிசனம் கண்டவரே
இரசவாதமரிந்த திவ்யரே
உங்கள் திருப்பாதம் சரணம்.”
6.அகப் பேய் சித்தர் (இயற்பெயர் நாயனார்) - தியானச்செய்யுள்

“இலை உடையுடன் காலை உருவாய்
காட்சி தரும் காரிய சித்தி ஸ்வாமியே
மாறாதா சித்தியை மரப்பொந்தினில்
பெட்ரா மங்காச் செல்வர்
செய்கின்ற புத்தியை
இசைகின்ற சித்தியால்
இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே.“
7.சடை முனி சித்தர் - தியானச்செய்யுள்

“சித்த வேட்கை கொண்டு
சிறந்து விளங்கிய சீலரே
அரங்கனிடத்தில் அணிகலன் பெற்ற
அற்புத மூர்த்தியே
எமை அறியாமை நீக்கி ஞானவரம்
அருள்வாய் ஸ்ரீ சடைமுனி ஸ்வாமியே.“
8.வல்லப சித்தர் என்ற சுந்தரனார் - தியானச்செய்யுள்

“சித்து விளையாட்டில் சிறந்தவரே
சிவனுடன் கலந்தவர்
ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே
அபாயம் அளிக்கும் அருளாளரே
மதுரையம்படி வாழ் மகத்துவமே
உன் பாதம் சரணம்.“
9.அகத்தியர் சித்தர் - தியானச்செய்யுள்

“ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவா யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்.“
10. தேரையர் சித்தர் - தியானச்செய்யுள்

“மாய மயக்கம் நீக்கி
காய கல்பம் தேடி
மூலிகை கொணர்ந்து
முதுகுக்கு கூன் நிமித்திய
அகத்தியர் சீடரே உன்பாதம் சரணம்.“
11.கோரக்கர் சித்தர் - தியானச்செய்யுள்

“சந்திர விழியும் மந்திர மொழியும்
கொண்ட சிவபக்தரே
சாமபாலி யதோன்றிய தவமணியே
விடை தெரியாப் பாதையில்
வீருப்பாய் நடை போடும் எம்மை
கைப்பிடித்து கரை சேர்ப்பாய்
கோரக்கச் சித்த பெருமாளே.“
12. பாம்பாட்டி சித்தர் - தியானச்செய்யுள்

“அடவி வாழ் பாம்புகளை ஆட்டு வித்து பின்
உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடு விட்டு கூடு பாய்ந்து ஞானமுத்து
கொடுத்தவரே குவலயத்தின் காவலரே
ஆதிசேஷனின் அருள்கண்ட
ஆதிசிவன் மஹான் வரம் கொண்டு
ஜாதிமதங்கள் பேதம் இன்றி
காக்கும் சித்தரே காக்க காக்க.“
13.ஷிவா வாக்கியர் - தியானச்செய்யுள்

“சிவனில் சிந்தை வைத்து
ஜீவனில் சித்து வைத்து
அவனினைக் காக்க வந்த
அழகர் பெருமானே
அபாயம் நீக்கி சிவாயம் காட்டும்
தங்கள் தாமரைத் திருவடிக்கு காப்பு.“
14. உரோம ரிஷி - தியானச்செய்யுள்

“கனிந்த இதயம், மெலிந்த உருவம்
சொரிந்த கருணை சொல்லி அடங்குமோ?
அலையும் மனதை அடக்கி
அருள் அள்ளியே தருவாய்
தாடியில் தங்கம் தந்த தெய்வமே
தங்கள் திருவடி சரணம்.“
15.இடைக்காட்டுச் சித்தர் - தியானச்செய்யுள்

“ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக் கருளிய கோணார் பெருமானே
ஓடுகின்ற கிரஹங்களை கோடு
போட்டுப் படுக்க வைத்த பரந்தாமனின் அவதாரமே
மண் சிறக்க விண் சிறக்க கடைக்கன்
திறந்து காப்பீர் இடைக்காடர் ஸ்வாமியே.“
16. குதம்பை சித்தர் - தியானச்செய்யுள்

“சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே
அத்திமரம் அமர்ந்து
ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்தியசித்தரே
கும்பிக்க எமக்கு நம்பிக்கையுடன்
நல்லாசி தருவாய் குதம்பை பெருமானே.“
17.ஸ்ரீ பதஞ்சலி முனிவர் - தியானச்செய்யுள்

“ஆய சித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தர வேண்டும் பதஞ்சலியாரே.“.
18.காகபுசுண்டர் - தியானச்செய்யுள்

“காலச் சக்கரம் மேல்
ஞானச் சக்கரம் இந்திய
மகா ஞானியே
யுகங்களைக் கணங்களாக்கி
கவனித்திடும் காக்கை ஸ்வாமியே
மும்மூர்த்திகள் போற்றும் – புஜண்டரே உமது
கால்பற்றிய எம்மைக் காப்பாய்
காக்க புஜண்ட சுவாமியே.“