தொல்கப்பிய தகவல்கள்

தொல்காப்பியத்தில் சைவ சித்தாந்த முப்பொருள்

மொழி என்பது மனிதர்களிடையே கருத்துப்  பரிமாற்றம் நிகழ்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இத்தகைய மொழி சரியான வகையில் இயங்குவதற்காகத் துணையாக அமைவது இலக்கணம் ஆகும். அவ்வகையில் காலப் பழமைமிக்க நம் தமிழ்மொழியில் கிடைத்துள்ள நூல்களில் முதல் நூலாக அமைந்து காணப்படுவது தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியம் இலக்கண

நூலாக இருந்தாலும் வாழ்வின் அனைத்துப் பொருள்களையும்  உள்வைத்துக் கூறும் இலக்கியமாகவும் திகழ்வதை அறிய முடிகிறது. இந்நூல் அமைந்து காணப்படும் சைவசித்தாந்த முப்பொருளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

சைவ சித்திதாந்த முப்பொருள்

சைவசித்ததாந்த என்பதன் பொருள் சைவ சமய அறிவின் முடிந்த முடிவு என்பதாகும். அந்நிலையில் சைவ  சித்திதாந்தம் பல நிலைகளில் நின்று பல பொருள்களை எடுத்துரைத்தாலும் இதற்கு  அடிப்படையாக அமைந்து காணப்படுவது மூன்று பொருள்களே அவை  பத்தி, பசு, பாசம், என்பன. இவற்றுள் பத்தி என்பது இறைவனையும், பசு என்பது உயிரையும் பாசம் என்பது உலகப் பற்றினையும் குறிக்கும். உயிர் (பசு) இறைவழி (பதி) நின்று வழிபட்டு உலகப்பற்றுகளில் (பாசம்) இருந்து நீங்க வேண்டும் என்பதே சைவசித்தாந்தம் கூறும் நன்னெறியாகும்.

தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் சைவ சித்தாந்த முப்பொருள்கள் பற்றிய செய்திகள் அமைந்திருப்பதை நுணுகி ஆராயும்போது அறிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பியம் ஒரு இலக்கணநூலாக மட்டுமன்றி சித்தாந்தத்தை உரைக்கும் சிறந்தநூலாகவும் உள்ளது என்பதை அறிய முடிகிறது.

இறைவன் (பதி)

பதி  என்று சொல்லப்படும் இறைவன் பேரறிவு உடையவன், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன், பசுவையும் பாசத்தையும் இயக்குபவன், பசுவாலும் பாசத்தாலும் உணரப்பட முடியாதவன் என்பது சைவ சித்தாந்தம் கூறும் கருத்து ஆகும்.சைவ சித்தாந்த சாத்திரமாகிய சிவப்பிரகாசம், “நின்மலமாய் ஏகமாய் நித்தமாகி” (சிவப்பிரகாசம் பாடல் எண் – 13) என்றும் சைவ சித்திதாந்த முதன்மை நூலாகிய சிவஞானப்பேதம், “ஊனக்கண் பாசம்  உணராப்பதியை ” (சிவஞானபோதம் – 2ம்  நூற்பா) என்றும் பதியின் இயல்புகளை எடுத்துக் கூறுகின்றன.இவற்றுள் இயல்பாகவே மலங்களினின்று நீங்கியவன் இறைவன் என்பதை தொல்காப்பியர். வினையின் நீங்கிய விளங்கிய அறிவின் முனைவர் கண்டது முதல் நூலாகும்.” (தொல்காப்பியம் – பொருளதிகாரம் – நூற்பா எண் – 640) என்று  கூறுகிறார். இதை வினை என்பது பாசத்தையும், மலங்களையும் குறிக்கிறது . மலங்களிலிருந்து நீங்கிய ஒருவன் விளங்கிய அறிவை, அதாவது பேரறிவை பெறுவான். அத்தகையவனால் செய்யப்படுவதே முதல்நூல் என்கிறார் தொல்காப்பியர். இக்கருத்தை மூலம் இறை பற்றிய செய்திகள்  தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

“தொல்காப்பியம் 1602 நூற்பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தொல்காப்பியர் காலத்துப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்”

உயிர்(பசு)

சைவசித்தாந்தம் கூறும் பசு எனப்படும் உயிர் சிற்றறிவு உடையது. அதனால் தனித்துச் செயல்படாது. உடலுடன் சேர்ந்து இருக்கும்போது மட்டுமே செயல்படும்.சார்ந்ததன் வண்ணமாகக் கூடியது. மேலும் பிறப்பிலேயே ஆணவ மாலத் தொடர்புடையது. இத்தகைய தன்மையுடைய உயிரின் இயல்பாய்ச் சிவப்பிரகாசம்,

“நெல்லிற்கு உமியும் நிலசெம்பினில் களிப்பும்
சொல்லிற் புதிதன்று தொன்மையே – வல்லி
மகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வால்
அரசோகம் செய்கமலத் தாம்.”

(சிவஞானப்பேதம் – 2ம் நூற்பா – 2ம் ஆதிகாரணம்  – 3ம் வெண்பா ) என்றும் சிவஞானபோதம் கூறுகிறது. இவ்வாறு உள்ள உயிர்  மட்டுமே செயல்படும் என்பதைத் தொல்காப்பியர், “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்” (தொல்காப்பியம் –  எழுத்ததிகாரம் – நூற்பா எண் – 46) என்று கூறுகிறார். இதன் பொருள் உயிர் சேரும்போதுதான் உடம்பு இயங்கும் என்கிறது சைவசித்தாந்தம். இதைத் தொல்காப்பியம் மெய்யோடி  இயையினும் உயிரியல் திரியா (தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – நூற்பா என் -10) என்று கூறுகிறது. மேலும் உயிர் என்பதைத் தனியாகக் காண இயலாது. அது சார்ந்திருக்கும் அறிய முடியும். இதைத் தொல்காப்பியம், மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே (தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – நூற்பா எண் -18) என்று குறிப்பிடப்படுகிறது. உயிர்மெய் என்பது  மெய் வடிவாக அமையும். இருப்பினும் அது  செயல்படும் பொருட்டு அதில் உயிர் இருப்பதை உணரமுடிகிறது.அதுபோல உடலுடன் சேர்ந்த உயிர் கண்ணுக்கு புலப்படாது செயல்படும் உடல் மூலமே அறிந்துகொள்ளும் இயல்புடையது என்பதை அறிய முடிகிறது. இதன்மூலம் உயிரின் இயல்பாய்த் தொல்காப்பியர் தன நூலில் கூறியுள்ள முறை புலப்படுத்துகிறது.

பாசம் (உலகப்பற்றுகள்)

சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள்களுள் இறுதியாக அமைந்து இருப்பது பாசம் ஆகும். பத்தி, பசு இரண்டைத் தவிர்த்த பிற அணைத்தும் பாசம் என்பதில் அடங்கும்.உயிரை இறைவனுடன் சேராமல் தடுப்பதே பாசமாகும். பாசம் அறிவித்தாலும் அறியமாட்டாமையால் அது அசைத்து எனப்படும். இந்த பாசத்திற்கு அடிப்படையாக அமைபவை ஆணவம், கன்மம், மாயை என்பன. ஆணவம் என்பது பிறப்புத்தொட்டே உயிருடன் இருக்கக்கூடியது. கன்மம் என்பது வினை, இது நல்வினை, தீவினை என இருவகையில் அமையும். மாயை என்பது மயக்கம் செய்வது. இது நிலையில்லாப் பொருள்களை குறிக்கும்.

கன்மத்தின் இயல்பு

இன்ப, துன்பங்களை எதிர்பாராத வகையில் தந்து நிற்பது கன்ம மலம் ஆகும். இதன் இயல்பாய் உண்மை விளக்கம்,

இலக்கணங்களை உடைய வினை யாருக்காகவுக்கும் காத்திருக்காமல், உரிய உயிரால் அடைந்து தன் செயலைச் செய்யும். இதைத் தொல்காப்பியம்,

“வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங்காலை காலமொடு தோன்றும்”

(தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – நூற்பா எண் -195) என்று கூறுகிறது. இது வினையைப் பற்றி நூற்பாவாக இருப்பினும் இதனை நுணுகி ஆராயும்போது சைவசித்தாந்தம் கூறும் வினைக்கும் இது பொருந்துவதை அறியமுடிகிறது.பாசமாகிய உடல் தனித்து இயங்காது இதைத் தொல்காப்பியர், “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” (தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – நூற்பா எண் – 18) என்று குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் மெய்யெழுத்து தனித்து நிற்கையில் புள்ளியோடு நிற்கும் என்பதாகும். அதாவது புள்ளியோடு நிற்கும் என்பது தனித்து இயங்காது என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றது. அதுபோல உடலானது தனித்து இயங்கமுடியாது என்பதை இந்நூற்பா குறிப்பால் உணர்த்துகிறது.

முடிவுகள்

தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் சைவ சித்தாந்த முப்பொருள்கள் பற்றிய செய்திகள் அமைந்திருப்பதை நுணுகி ஆராயும்போது அறிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பியம் ஒரு இலக்கணநூலாக மட்டுமன்றி சித்தாந்தத்தை உரைக்கும் சிறந்தநூலாகவும் உள்ளது என்பதை அறிய முடிகிறது.

tholkaapiyam

Loading

நடை திறக்கும் நேரம்

5 am – 11 pm, 5 pm – 7 pm
ஞாயிறு முதல் சனி வரை

தொடர்புக்கு

தலைவர்  நல்லாம்பள்ளி N.M.நாச்சிமுத்து,
வலைப்பக்க நிர்வாகிகள்
Dr. P. சரவண பிரவீன் குமார், மலேஷியா: +918883355444, +60126968008
திரு. V.N. சண்முக சுந்தரம், கோவை: +919443053517
திரு. N. வெற்றி செல்வன், நல்லாம்பள்ளி: +919842822009
திரு. P. சீனிவாசன், அமெரிக்கா: +1319654-6969

அருள்மிகு மத்துருகோட்டி அம்மன் திருக்கோவில் © 2025. All Rights Reserved. Designed By Sentersoft Technologies