பார்க்கும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் நமக்காக சக்தியின் வரவுகொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கும் திருக்கோயில்களாகும். இறைமையும் எழிலும் தவழும் ஏரிப்பட்டியில் பன்னெடுங்காலமாக 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தில் மக்கடையார் குலதெய்வமாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை அருள்மிகு மருத்துககோட்டி அம்மன் திருக்கோயில் புதுப்பிக்க்கப்பட்டு, வண்ணம்வைத்தும் பல்வேறு திருப்பணிகள் செய்து நவநாயகர்கள் திருக்கோயில் மாற்றி அமைத்தும் பணிகள் செவ்வனே நிறைவு பெற்றுள்ளன. இத்திருக்கோயிலின் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா திருக்கைலாய மரபு மெய்க்கண்டார் வழிவழி பேரூராதீனம் சீர்வளர்ச் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தலைமையில் நிகழும் விளம்பி தைத்திங்கள் 27ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் வளர்பிறையும், ரேவதி உடுவும் கூடிய நன்னாளில் காலை 6.45 மணிக்குமேல் 7.30 மணிக்குள் கும்ப லக்கினத்தில் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் இவ்வினிய விழாவில் கலந்து அன்னையின் அருள் பெற்றிட அன்புடன் அழைக்கிறோம்.
