Home

கோவில்

திருவிழாக்கள்

புகைப்படம்

காமாட்சி-அம்மன்

மூலமந்திரம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனை
நந்தி  மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

விநாயகர் மந்திரம்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

முருகர் மந்திரம்

மக்கடையார் குலம் காக்க வந்துதித்த மாமகளே!
மத்துரு கோட்டியம்மன் எனும் திருநாமம் பூண்டவளே !
திக்கெட்டும் புகழ்மணக்கும் தீந்த்தமிழே ஓவியமே!
திராவியமே சேர்ந்திடடி தெவிட்டா நின் திருவருளை !

மத்துருகோட்டி அம்மன் மந்திரம்

நல்வரவு

24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தில் மக்கடையார் குலதெய்வமாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை அருள்மிகு மத்துருகோட்டி அம்மன் அம்மன் திருக்கோவிலுக்கு வந்து அன்னையின் அருள் பெற்றிட அன்புடன் அழைக்கிறோம்.

குலதெய்வங்கள்

தலவரலாறு

நமது முன்னோர்கள் மக்கடையார் ,கொலையார் மும்முடியார் ஆகிய மூன்று குலப்பெருமக்கள் குடும்பத்தோடு மாமன் மைத்துனர்கள் அனைவரும் பல நூற்றாண்டுகளுக்கு முன் நமது மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து பிழைப்புத்தேடி மேற்கு நோக்கி பொதிமாடுகளில் பயணித்தனர்.

சமீபத்திய திருவிழாக்கள்

கார்த்திகை
கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

மகாசிவராத்திரி
மஹா சிவராத்திரி

மஹாசிவராத்திரி என்பது வரம் கிடைக்கும் இரவு. ஆம், இது நிஜம்தான்! வாழ்வை இன்னும் ஆழமாக, ஆனந்தமாக நீங்கள் வாழ்வதற்கு இயற்கையே வழங்கும் வரம் இது!. நம் வாழ்வை நாம் வாழும்விதம், உணரும்விதம், நம் செயல்திறன் என அனைத்தும் நம் சக்தியளவைப் பொறுத்துதான் அமைகிறது.

தைப்பூசம்
தைப்பூசம்

அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும்.

நன்னீராட்டு-விழா
திருக்குடநன்னீராட்டு

பார்க்கும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் நமக்காக சக்தியின் வரவுகொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கும்  திருக்கோயில்களாகும். இத்திருக்கோயிலின் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா தைத்திங்கள் 27ம் நாள் நடைபெற உள்ளது.

24 மனை தெலுங்கு செட்டியார்

24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. சிலர் வீடு என்றும் குறிப்பிடுவார்கள். இதில் 16 (பதினாறு) கோத்திரங்கள் ஆண் வீடு என்றும் 8 (எட்டு) கோத்திரங்கள் பெண் வீடு என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன.

Loading

நடை திறக்கும் நேரம்

5 am – 11 pm, 5 pm – 7 pm
ஞாயிறு முதல் சனி வரை

தொடர்புக்கு

தலைவர்  நல்லாம்பள்ளி N.M.நாச்சிமுத்து,
வலைப்பக்க நிர்வாகிகள்
Dr. P. சரவண பிரவீன் குமார், மலேஷியா: +918883355444, +60126968008
திரு. V.N. சண்முக சுந்தரம், கோவை: +919443053517
திரு. N. வெற்றி செல்வன், நல்லாம்பள்ளி: +919842822009
திரு. P. சீனிவாசன், அமெரிக்கா: +1319654-6969

அருள்மிகு மத்துருகோட்டி அம்மன் திருக்கோவில் © 2025. All Rights Reserved. Designed By Sentersoft Technologies